வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
முத்துப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியர்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகம் அருகே வசிப்பவர் மகாலிங்கம் மனைவி ராஜலட்சுமி (வயது60). இவர் அப்பகுதியில் உள்ள ஆசிரியர் முத்துச்சாமி என்பவரின் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த வீட்டை பராமரித்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் மின்விளக்கை ஒளிர வைக்க ராஜலட்சுமி சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டுக்குள் ஒருவர் பொருட்களை திருடிக்கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து வீட்டில் பொருட்களை திருட முயன்றவரை பிடித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முத்துப்பேட்டை தெற்குகாட்டை சேர்ந்த சரவணன்(48) என்பதும் அவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து சரவணனை போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்ட உடைத்து ஒருவர் திருட முயன்ற சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.