3 கடைகளில் ரூ.51 ஆயிரம் திருட்டு


3 கடைகளில் ரூ.51 ஆயிரம் திருட்டு
x
திருப்பூர்


காங்கயத்தில் 3 கடைகளின் மேற்கூரைைய பிரித்து ரூ.51 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருட்டு

காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் கடை உள்ளது. இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் நேற்று காலை கடைக்கு வந்து திறந்து பார்த்தபோது மேஜையின் டிராவில் வைக்கப்பட்டிருந்த ரூ.40 ஆயிரத்தை காணவில்லை. அப்போதுதான் கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்தது. கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த ஆசாமிகள், மேஜை டிராயரில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடி சென்று உள்ளனர்.

இந்த கடையை ஒட்டியுள்ள அப்துல்ஜப்பார் என்பவருக்கு சொந்தமான டீசல் என்ஜின் ஒர்க் ஷாப்பில் ரூ.3 ஆயிரமும், பழனியப்பன் என்பவரது சலூன் கடையில் வைத்திருந்த ரூ. 8 ஆயிரம் உட்பட ரூ..51 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். இது குறித்து கடை உரிமையாளர்கள் காங்கயம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு கேமரா

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமியின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். காங்கயத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story