டீக்கடை மேற்கூரையை உடைத்து நகை-பணம் திருட்டு
டீக்கடை மேற்கூரையை உடைத்து
நகை-பணம் திருட்டுடீக்கடை மேற்கூரையை உடைத்து
நகை-பணம் திருட்டு
முத்தூர் அருகே உள்ள முத்துமங்களம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57). இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதன்பின்பு நேற்று முன்தினம் காலை கந்தசாமி தனது டீக்கடைக்கு வந்து திறந்து உள்ளே சென்ற போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் டீக்கடையில் பார்த்தபோது அங்கு வைத்திருந்த அரை பவுன் தங்கம் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டு உள்ளது தெரிய வந்தது.
இது பற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கந்தசாமி தனது டீக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற பிறகு இரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் சிமெண்டு சீட்டு மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை திருடி சென்று உள்ளனர் என தெரிய வந்தது. இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.