ரூ.4 லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் கைது


ரூ.4 லட்சம் திருடிய  முன்னாள் ஊழியர் கைது
x
திருப்பூர்

மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது32).இவர் உடுமலை எலைய முத்தூர் பிரிவில் அரசு கலைக் கல்லூரி செல்லும் வழியில் ஆன்லைன் பொருட்களை வினியோகம் செய்யும நிறுவனம் நடத்தி வருகிறார். பாலாஜி கடந்த 24-ந்தேதி இரவு வேலையை முடித்துக்கொண்டு நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.மறுநாள் காலை அவர் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவுக்குள் இருந்த ரூ.4லட்சத்து12 ஆயிரம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் நிகழ்வுகள் பதிவாகும் பெட்டி உள்ளிட்டவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து பாலாஜி உடுமலை போலீசில் புகார் செய்தார். மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கஏதுவாக தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளும் எடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த பிரபாகரன் (29) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் அடங்கிய பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.ரூ.4 லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் கைது


Next Story