திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
மகாராஜபுரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
திருவாரூர்
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை மகாராஜபுரம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அரவான் களப்பலி, அர்ஜுனன் தபசு, சக்தி கிரகம், பீமன் சபதம், திரவுபதி கூந்தல் முடிதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடந்தது. இதற்காக கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் அம்மனுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் திருமக்கோட்டை போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story