திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற சரக்கு வேன்


திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற சரக்கு வேன்
x

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற சரக்கு வேனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு

தாளவாடி

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற சரக்கு வேனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

27 கொண்டை ஊசி வளைவுகள்

சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது ஆகும். தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மலைப்பாதை வழியாக சென்று வருகின்றன.

இந்த மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளாக மாறிவிட்டன.

சரக்கு வேன்

இந்த நிலையில் தாளவாடியில் இருந்து ஈரோட்டுக்கு சரக்கு வேன் ஒன்று நேற்று புறப்பட்டது. காலை 8 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது திரும்ப முடியாமல் நின்று விட்டது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் சரக்கு வேனை இயக்க முடியவில்லை. இதனால் திம்பம் மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை கண்டதும், அந்த வழியாக வந்த லாரி டிரைவர் ஒருவர் லாவகமாக சரக்கு வேனை இயக்கி 9 மணி அளவில் சாலையோரம் நிறுத்தினார். இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்களில் வந்த பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.


Next Story