திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன்கள் மோதல்


திம்பம் மலைப்பாதையில்  சரக்கு வேன்கள் மோதல்
x

வேன்கள் மோதல்

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை தமிழக-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய பாதையாகும். அதனால் இந்த பாதையில் எப்போதும் வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் அடிக்கடி இந்த கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்று விடுகின்றன.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து கோவைக்கு தின்பண்டங்கள் பாரம் ஏற்றிய சரக்கு வேன் ஒன்று வந்துகொண்டு இருந்தது. பெங்களூருவை சேர்ந்த சீதாராமன் (வயது 27) என்பவர் வேனை ஓட்டினார்.

இதேபோல் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து மைசூருக்கு சரக்கு வேன் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. கொல்லத்தை சேர்ந்த வித்தியாசாகர் (34) வேனை ஓட்டினார்.

நேற்று மாலை 4 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது இந்த 2 சரக்கு வேன்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 சரக்கு வாகனங்களின் முன்பகுதியும் சேதமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி டிரைவர் சீதாராமன் படுகாயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தால் திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சேதமடைந்த 2 சரக்கு வேன்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story