திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்
பனிமூட்டம்
ஈரோடு
தாளவாடி அருகே உள்ள திம்பம் மற்றும் ஆசனூர் பகுதியில் காலை நேரங்களில் பனிமூட்டமாக காணப்படுகிறது. அதேபோல் நேற்று காலை 10 மணி வரை திம்பம் மலைப்பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினார்கள். சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகன ஓட்டிகள் அனைத்து முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். மலைப்பகுதி முழுவதும் மேகமூட்டம் சூழ்ந்திருந்ததால் இருள் சூழ்ந்தது போல் காட்சி அளித்தது. மேலும் தலமலை, கேர்மாளம், குளியாடா, மாவள்ளம், தாளவாடி ஆகிய பகுதிகளிலும் பனிமூட்டம் நிலவியது. திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் திம்பம் மலைப்பகுதியின் அழகை ரசித்தவாறு வாகனத்தில் சென்றனர்.
Related Tags :
Next Story