திம்பம் மலைப்பாதையில் நின்றுகொண்டு இருந்த கார்கள் மீது லாரி மோதல்


திம்பம் மலைப்பாதையில் நின்றுகொண்டு இருந்த கார்கள் மீது லாரி மோதல்
x

திம்பம் மலைப்பாதையில் நின்றுகொண்டு இருந்த கார்கள் மீது லாரி மோதியது.

ஈரோடு

தாளவாடி

தமிழ்நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடகா செல்வதற்கு சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால் எப்போதும் கார், லாரி, பஸ், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து நாமக்கல் நோக்கி ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. நேற்று காலை சத்தி அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையின் 19-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியது. அப்போது சத்தியமங்கலம் நோக்கி சென்ற காரும், கர்நாடக மாநில மைசூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.

இந்தநிலையில் நாமக்கல் நோக்கி சென்ற லாரி சாலை ஓரத்தில் நின்றிருந்த 2 கார்கள் மீது மோதியது. இதில் 2 கார்களும் சேதம் அடைந்தன. காரில் இருந்த 8 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள். சாலை ஓரத்தில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story