திண்டல் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி


திண்டல் கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 March 2023 12:30 AM IST (Updated: 11 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் திண்டல் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 7 கிராம மக்கள் சார்பில் மழை வேண்டியும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்றது. மகாபாரத சொற்பொழிவின் நேற்று 18-வது நாளில் 18-ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

இதில் வெற்றிவேல் நாடக சபா கோபால் மற்றும் கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம் அணிந்தும், பஞ்ச பாண்டவா் வேடம் அணிந்தும் நடித்து காட்டினா். இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா மண்டு கவுண்டர் மற்றும் 7 ஊர் கவுண்டர்கள் செய்திருந்தனர்.


Next Story