தண்ணீர் என நினைத்துதின்னர் குடித்த பெயிண்டர் சாவு
சின்னமனூர் அருகே தின்னர் குடித்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
தேனி
சின்னமனூர் அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் கணபதி (வயது 42). பெயிண்டர். நேற்று முன்தினம் இவர், சீலையம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டு அடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கை, கால் வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால் பதற்றத்தில் அருகே பாட்டில் இருந்த தின்னரை, தண்ணீர் என நினைத்து எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story