திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 6 Jun 2022 11:59 PM IST (Updated: 7 Jun 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

விக்கிரமங்கலம்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த மே மாதம் 2-ந் தேதி காப்புக்கட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் பாரதக் கதைகள் பாடப்பட்டு வந்தன. அவ்வப்போது இரவு சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தன. மேலும் அர்ச்சுனன் வில் வளைக்கும் நிகழ்ச்சி, அரவான் நிகழ்ச்சி, திரவுபதி அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சி, காளியம்மன் நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து நேற்று மாலை சிவன் கோவில் அருகே உள்ள திடலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி திரவுபதி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிகுண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு அம்மன் வீதிஉலா மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விக்கிரமங்கலம் கிராம நாட்டாமைகளும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.


Next Story