தேன்கனிக்கோட்டையில்பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்


தேன்கனிக்கோட்டையில்பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் உள்ள கெலமங்கலம் சாலையில் சேலத்து மாரியம்மன் மற்றும் எல்லம்மா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில்களில் மண்டல பூஜை நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) ஊர் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதை முன்னிட்டு சேலத்து மாரியம்மன் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளங்கள் முழங்க கூழ் மற்றும் தீர்த்தகுடங்களை தலையில் சுமந்து தேர்ப்பேட்டை மந்தை மாரியம்மன், உத்தண்டி மாரியம்மன் கோவில் வழியாக சேலத்து மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.


Next Story