தோடர் கோவிலுக்குள் 30 பேர் அத்துமீறி நுழைந்ததாக புகார்


தோடர் கோவிலுக்குள் 30 பேர் அத்துமீறி நுழைந்ததாக புகார்
x

கோத்தகிரி அருகே தோடர் கோவிலுக்குள் 30 பேர் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே பெட்டுமந்து கிராமத்தில் தோடர் இன மக்களின் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்திற்குள் தோடர் இன பெண்கள் மற்றும் வெளி நபர்கள் செல்ல அனுமதி இல்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் குன்னூரை சேர்ந்த 30 பேர் தோடர் கோவில் வளாகத்திற்குள் சென்று உள்ளனர். இதை பார்த்த தோடர் மக்கள், கோவிலுக்குள் செல்லக்கூடாது என்றனர். இதனால் வெளிநபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கிராம மக்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து நீரஜ் (வயது 64) பாரம்பரிம் வாய்ந்த கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து விட்டு, அங்கு திரண்டு நின்றனர். போலீசார் விசாரணை நடத்தியதில் குன்னூரை சேர்ந்த யாசின் (30) மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 30 பேர் கோவிலுக்குள் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு சசிகுமார், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 30 பேர் செய்த தவறை ஒப்புக்கொண்டதுடன், கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்டனர். இதனால் சமரசம் அடைந்த தோடர் மக்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story