திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நேற்று திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் அதிகாலையில் இருந்து கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் நடந்தது. தொடரந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

போலீஸ் பாதுகாப்பு

கோவிலில் மெகாதிட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் போதுமான அளவு கார் பார்க்கிங் வசதி இல்லாததால் பக்தர்கள் வந்த கார்கள், வேன்கள் போன்றவை ரதவீதிகள், தெப்பக்குளம் பகுதி, நெல்லை ரோடு, ரயில் நிலையம் பகுதி, டி.பி. ரோடு மற்றும் பஸ்நிலையம் பகுதி போன்ற இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்திருந்தனர்.


Next Story