திருச்செந்தூரில்நெல்லை ரெயில் திடீர் ரத்தால் பயணிகள் அவதி


தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில்நெல்லை ரெயில் திடீர் ரத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு நேற்று காலையில் பயணிகள் ரெயில் திடீரென ரத்து செய்யப்பட்டதாலும், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் 2 மணிநேரம் தாமதமாக வந்ததாலும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ரெயில் என்ஜின் பழுது

திருச்செந்தூரில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் ரெயிலில் திருச்செந்தூர் பகுதியிலிருந்து நெல்லை பகுதிக்கு தனியார் மற்றும் அரசு வேலைக்கு ெசல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் பயணம் செய்வர்.

மேலும்முதல்நாள் இரவில் தங்கி சுவாமி தரிசனம் ெசய்யும் பெரும்பாலான பக்தர்களும் இந்த ரெயிலில் செல்வது வழக்கம்.

பயணிகள் குழப்பம்

இதன்படி நேற்று காலையில் இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் ஏறினர். ஆனால் ரெயில் காலை 7.10 மணியை தாண்டியும் புறப்படவில்லை. இதனால் பயணிகள் குழப்பத்துடன் ரெயிலில் அமர்ந்திருந்தனர். ரெயில் நிலைய அதிகாரிகள், என்ஜின் பழுது காரணமாக அந்த ரெயிலில் வேறு என்ஜின் மாற்றப்பட்டு புறப்படும் என கூறினர்.

இந்த நிலையில் சுமார் 7.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆறுமுகநேரியில் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் என்ஜின் கழிற்றி வரப்பட்டு, திருச்செந்தூரில் முதல் பிளாட்பாரத்தில் என்ஜின் பழுதாகி நின்ற ரெயிலில் மாட்டப்பட்டு, 2-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது.

2 மணிநேரம் தாமதம்

பின்னர் அந்த என்ஜின் ஆறுமுகநேரி கொண்டு ெசல்லப்பட்டு, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை இழுத்து வந்தது. சுமார் 8 மணிக்கு வரவேண்டிய அந்த ரெயில் 10 மணியளவில் முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்தது. அந்த ரெயில் மீண்டும் காலை 10.15 மணிக்கு பயணிகள் ரெயிலாக நெல்லைக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் காலை 7.10மணிக்கு செல்லவேண்டிய ரெயிலில் மீண்டும் செந்தூர் எக்ஸ்பிரஸ் என்ஜின் மாட்டப்பட்டு, செல்லும் என கூறப்பட்டது.

பயணிகள் அவதி

காலை 10.05 மணிக்கு திடீரென அந்தரெயில் ரத்து செய்யப்பட்டு, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்தான் முதலில் நெல்லைக்கு செல்லும் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி அந்த ரெயிலில் இருந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு காலதாமதமாக காலை 10.50 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


Next Story