கடலூர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில்சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண விழாநாளை மறுநாள் நடக்கிறது
கடலூர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண விழா நாளை மறுநாள் நடக்கிறது.
கடலூர்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ்நகரில் வலம்புரி அற்புத விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு 16-ம் ஆண்டு பங்கு உத்திரம் மற்றும் திருக்கல்யாண விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு பால்குடஅபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு சாமி வீதி உலாவும் நடக்கிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நகரவாசிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story