தெய்வானை திருக்கல்யாண உற்சவம்
தர்மபுரி சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடு மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சூரசம்ஹார விழாவும், பூர்த்தி ஓமமும் நடைபெற்றது. விழாவின் கடைசி நிகழ்ச்சியாக கோவில் வளாகத்தில் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சீர் வரிசை அழைப்பும், சாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் உபகார பூஜை நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு திருக்கல்யாண சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்.