மகாசக்தி மாரியம்மன் கோவிலில்திருக்கல்யாண திருவிழா


மகாசக்தி மாரியம்மன் கோவிலில்திருக்கல்யாண திருவிழா
x
திருப்பூர்


கொங்கல்நகரத்தில் மிகவும் புகழ்பெற்ற மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 23-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 25-ந்தேதி கம்பம் நடுதல் தொடர்ந்து விநாயகர் பொங்கல், கம்பத்தில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 2-ந்தேதி பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

3-ந்தேதி காலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் 6 மணிக்கு மேல் 10 மணிக்குள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு மேல் கம்பம் எடுத்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 4-ந்தேதி மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் 5-ந்தேதி அபிஷேக பூஜையும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கொங்கல்நகரம், கொங்கல்நகரம் புதூர், ராவணாபுரம், லிங்கம்மாவூர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story