பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்


பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
x

வருடாபிேஷகத்தையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு கோவில் மண்டபத்தில் 6 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக புண்ணியாகவாஜனம், விநாயகர் பூஜை, சிவ, கந்தஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் விநாயகர், கைலாசநாதர், சோமாஸ்கந்தர், வள்ளி-தெய்வானை, பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் வருடாபிஷேகத்தையொட்டி மாலை 6 மணிக்கு கைலாசநாதர்-பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பின் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை தங்கமயில் வாகனத்திலும், ரிஷப வாகனத்தில் பஞ்மூர்த்தியும் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில், கோவில் கண்காணிப்பாளர் அழகர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்தனர்.


Next Story