பொன்னியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்


பொன்னியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
x

ஆண்டியப்பனூர் பொன்னியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூர் கிராமம் லாலா பேட்டையில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் பொன்னியம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி, ரிக்ஷா சரவணன், பி.குமார் ஏ.பிரபு, ஜி.பிரகாசம், பொன்னியம்மன் கோவில் பூசாரி ஏ.கவுரவம் ஆ௳ியோர் தலைமையில் நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் சார்பில் சீர்வரிசை, மேள தாளங்களுடன் பொன்னியம்மன் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு சாமி அலங்கரிக்கப்பட்டு பின்னர், சாமி பின்புறம் உள்ள வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் மஞ்சள் குங்குமம் மூலம் மரத்தில் அம்மன் சாமி வரையப்பட்டு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், யாக வேள்வி, தம்பதியர் சங்கல்பம், நடைபெற்றது.

தொடர்ந்து பலவித மூலிகையால் யாக குண்டம் வளர்க்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் தாலி கட்டி, பொதுமக்கள் ஆசீர்வாதம் பெற்றனர். நிகழ்ச்சியில் மிட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவாஜி பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story