ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
திட்டச்சேரி:
திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும், அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முருகன், தக்கார் தனலெட்சுமி, கோவில் திருப்பணி குழுவினர், திருமருகல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று(புதன்கிழமை) நடக்கிறது.