அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருக்கல்யாணம்


அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:45 PM GMT)

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருக்கல்யாணம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருக்கல்யாணம் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேகம் நடக்கிறது.

அய்யா வைகுண்டர் அவதாரபதி

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 15-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை அவதாரபதி நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு பணிவிடையும், பகல் 12 மணிக்கு உச்சி பணிவிடையும் நடந்தது.

திருக்கல்யாணம்

பின்னர் மாலை 5 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்தார். பின்னர் பரப்பாடி வைகுண்ட மகாராஜன் குழுவினர் திருக்கல்யாண திருஏடு வாசித்தனர். தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அவதாரபதியில் சீர்வரிசை கொடுத்து தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் வக்கில் சந்திரசேகரன், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் பொன்னுதுரை, துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் துணை செயலாளர் ராமகிருஷ்ணன், இணை தலைவர்கள் பால்சாமி, விஜயகுமார், இணை செயலாளர்கள் செல்வின், தங்ககிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், வரதராஜன், நிர்வாக குழு உறுப்பினர்கள் லெட்சுமணன், பாலகிருஷ்ணன், சுதேசன், சங்கரன், ராமமூர்த்தி, கண்ணன், வினோத், சிவாஜி, சீனிவாசன், தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டாபிஷேகம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது.


Next Story