திருக்கடையூர்- ஆக்கூர் பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்


திருக்கடையூர்- ஆக்கூர் பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் அக்னி வெயிலால் திருக்கடையூர் மற்றும் ஆக்கூர் பகுதிகளில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

சுட்டெரிக்கும் அக்னி வெயிலால் திருக்கடையூர் மற்றும் ஆக்கூர் பகுதிகளில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

சுட்டெரிக்கும் வெயில்

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

திருக்கடையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கை ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.

நுங்கு விற்பனை

இதனால் திருக்கடையூர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆக்கூர், மடப்புரம், நட்சத்திர மாலை, வளையல் சோழகன், மாத்தூர், கண்ணங்குடி, கிள்ளியூர், டி. மணல்மேடு, பிள்ளை பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பனை நுங்கை கொண்டுவரப்பட்டு மேற்கண்ட பகுதியில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.


Next Story