திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஒரே நாளில் 100 பேர் ஆயுள் விருத்தி ஹோமம் நடத்தியதால் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருக்கடையூர்:
ஒரே நாளில் 100 பேர் ஆயுள் விருத்தி ஹோமம் நடத்தியதால் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் இக்கோவிலும் ஒன்று.
இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். மணி விழா, சதாபிஷேகம், மற்றும் ஆயுள் ஹோமம் உள்ளிட்டவற்றை இங்கு நடத்தினால் ஐஸ்வர்யங்களை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆயுள் விருத்தி ஹோமம்
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்தி ஹோமம் நடத்த ஏராளமான பக்தர்கள் திரண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ேடார் ஆயுள் விருத்தி ஹோமம், மணி விழா, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் செய்தனர். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
இதன் காரணமாக கோவில் வளாகம், மெயின் ரோடு, சன்னதி வீதி, மேல வீதி, வடக்கு மடவளாகம், தெற்கு மடவளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.