திருக்கடையூர் அமிர்த சாய் தியான பீடம் 5-ம் ஆண்டு தொடக்க விழா


திருக்கடையூர் அமிர்த சாய் தியான பீடம் 5-ம் ஆண்டு தொடக்க விழா
x

திருக்கடையூர் அமிர்த சாய் தியான பீடம் 5-ம் ஆண்டு தொடக்க விழா

மயிலாடுதுறை

திருக்கடையூர் மெயின் ரோட்டில் உள்ள அமிர்த சாய் தியான பீடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்்தது. இதையடுத்து தினமும் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 4-ம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா மற்றும் 5-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், சிறப்பு யாக பூஜைகளும் நடைபெற்றன.

கோவிலின் உட்புறம் கடம் புறப்பட்டு கோவில் வளாகத்தை சுற்றி வந்து மேள தாளங்களுடன் அமிர்த சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பழவகைகள், இனிப்புகள் மற்றும் பல்வேறு பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக காலையில் விக்ேனஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், கலச பூஜைகள், விசேஷ ஹோமங்கள், பூர்ணாகுதி நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கடையூர் அமிர்த சாய் தியான பீட அறக்கட்டளை நிர்வாகி கேர்இண்டியா பாஸ்கர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story