திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்


திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் 100 கால் மண்டபம் எதிரில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மனும் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. கோவில் குருக்கள் சீர்வரிசை எடுத்து வந்து மந்திரம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள், நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.


Next Story