முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கரக உற்சவம்


முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கரக உற்சவம்
x

குன்னூர் அருகே முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கரக உற்சவம் நடந்தது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே கிளிஞ்சடா கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருக்கரக உற்சவம் மற்றும் வருடாந்திர பெருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் காலை முகூர்த்த கால்நட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. தொடர்ந்து 31-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை தினசரி காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. 3-ந் தேதி காலை சிறப்பு பூஜை மற்றும் இரவில் ஆற்றங்கரையில் இருந்து அம்மனை அழைத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 4-ந் தேதி முத்தநாடு ஆற்றங்கரையில் இருந்து பால் குடம், தீர்த்த குடம், பூவோடு அலகு பூட்டி வருதல் மற்றும் அபிஷேக ஆராதனை, அன்னதானம் நடந்தது.

இந்தநிலையில் சிறப்பு பூஜை, வழுக்கு மர வைபவம், சப்பர ஊர்வலம், மஞ்சள் நீராட்டுடன் அம்மன் திருவீதி ஊர்வலம், இரவு அம்மன் கங்கை சேர்த்தல் ஆகிய திகழ்ச்சிகள் நடைபெற்றன. வருகிற 10-ந் தேதி காலையில் நடை திறப்பு மறு பூஜை மற்றும் முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.


Next Story