திருக்குறள் மைய கூட்டம்


திருக்குறள் மைய கூட்டம்
x

பாபநாசம் திருக்குறள் மைய கூட்டம் நடந்தது.

பாபநாசம்:

பாபநாசம் சன்னதித் தெருவில் உலகத் திருக்குறள் மையத்தின் மாத கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மையத்தின் தலைவர் ஜெயமனோகரன் தலைமை தாங்கினார். .துணைத்தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தார்.செயலாளர் கு.ப.செயராமன் வரவேற்றார். "திருக்குறளில் தமிழர் பண்பாடு" என்ற தலைப்பில் முனைவர் பாஸ்கர் பேசினார்..பாபநாசம் உலகத் திருக்குறள் மையம் மற்றும் வலங்கைமான் அறம் அறக்கட்டளை இணைந்து நடத்திய திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்குகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள், பெற்றோர் மற்றும் திருக்குறள் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் துணைத் தலைவர் கோடையிடி குருசாமி நன்றி கூறினார்.


Next Story