திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை போட்டிகள்


திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை போட்டிகள்
x

உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தன.

ராணிப்பேட்டை


உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தன.

உலக திருக்குறள் பேரவை ரத்தினகிரி சார்பில், திருக்குறள் நெறிகளை மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் திருக்குறள் போட்டிகள் ரத்தினகிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் 6-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் பற்றிய பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடைபெற்றன.

போட்டிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 2,210 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளை உலக திருக்குறள் மாவட்ட பேரவை தலைவர் பாலமுருகனடிமை சுவாமிகள் தொடங்கி வைத்தார். செயலாளர் கவிஞர் மா.ஜோதி, புலவர் வே.பதுமனார், பொருளாளர் தேவ.சிவனார்அமுது ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு போட்டிகளில் பல்வேறு தமிழ்புலவர்கள் நடுவர்களாக பணியாற்றினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், ஊக்கப்பரிசுகளும் நவம்பர் 26-ந் தேதி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெறும் திருவள்ளுவர் திருவிழாவில் வழங்கப்பட உள்ளது.

ற்பாடுகளை ரத்தினகிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

2 காலம்

குறிப்பு: மேலாளர் செய்தி, 3-வது எடிசன்

----

Reporter : S. PONSINGH_Staff Reporter Location : Vellore - VELLORE


Next Story