திருக்கோவிலூர் ஒன்றியக்குழு கூட்டம்


திருக்கோவிலூர் ஒன்றியக்குழு கூட்டம்
x

திருக்கோவிலூரில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் ஒன்றியக்குழு கூட்டம் சந்தைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி, ஒன்றியக்குழு துணை தலைவர் தனம்சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஏகாம்பரம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தேவைப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். அதனை கேட்ட ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story