1330 குறள்களையும் ஒலிக்க செய்யும் விநாயகர் கோவில் கடிகாரம்
1330 குறள்களையும் விநாயகர் கோவில் கடிகாரத்தில் ஒலிக்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
வாடிப்பட்டி,
சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளம் மந்தைதிடலில் சிவசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மேல் தளத்தில் ஒலிபெருக்கியுடன் கூடிய கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கடிகார ஒலிபெருக்கியில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நேரத்தை கூறி அதன்பின் ஒரு திருக்குறள் விளக்க உரையுடன் ஒலிபரப்பப்படுகிறது. தினம்தோறும் காலை 5 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரையிலும் திருக்குறள் கூறப்படுகிறது. 1330 குறள்களும் ஒலிபரப்பப்படுகிறது. இப்பகுதிக்கு புதிதாக செல்பவர்கள் திருக்குறள் ஒலிபரப்பப்படுவதை ஆர்வமுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டு செல்கின்றனர். மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது போல் தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள கடிகார ஒலிபெருக்கியில் ஒலிபரப்ப செய்யலாம் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story