மதுரகாளியம்மன் கோவில் திருநடன உற்சவம்


மதுரகாளியம்மன் கோவில் திருநடன உற்சவம்
x

ஆடுதுறை மதுரகாளியம்மன் கோவில் திருநடன உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

ஆடுதுறை மதுரகாளியம்மன் கோவில் திருநடன உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருநடன உற்சவம்

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் புகழ்பெற்ற மதுர காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம் கடந்த மார்ச் 27-ந் தேதி காப்புகட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 4-ந் தேதி காலை சிறப்பு பூஜைகளுடன் 30-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் மங்கல வாத்தியங்களுடன் அம்மன் திருநடன உற்சவம் தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஆடுதுறை பகுதி முழுவதும் சென்று நேற்று கோவில் திரும்பிய மதுர காளியம்மனின் இறுதி கட்ட நடனத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடுதுறை திருநீலக்குடி சாலையில் இருபுறமும் திரண்டு நின்றனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ெரயில்வே சாலை சித்தி விநாயகர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மதுர காளியின் நடனம் நடந்தது. குறிப்பாக அம்மனின் மகுடி இசைக்கு ஆடிய ஆட்டம் அனைவரையும் பக்தியில் மெய்சிலிர்க்க வைத்தது.

இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், நிர்வாக அதிகாரி ராமபிரசாத், துணைத் தலைவர் கமலாசேகர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான இளைஞர்களும், பெண்களும் செல்போனில் மதுர காளியம்மன் நடனத்தை போட்டி போட்டுக்கொண்டு வீடியோ எடுத்தனர். .

1,008 பால்குட ஊர்வலம்

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 14-ந் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவமும், 16-ந் தேதி ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து அலகு காவடிகளுடன் 1008 பால்குடம் ஊர்வலமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மதுர காளியம்மன் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story