திருப்பூர் வீரருக்கு வெண்கலப்பதக்கம்


திருப்பூர் வீரருக்கு வெண்கலப்பதக்கம்
x
திருப்பூர்


மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய யூத் தடகள சேம்பியன் ஷிப் போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் திருப்பூரை சேர்ந்த ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர் விஷ்ணுஸ்ரீ 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார். இவர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 55 வினாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை குவைத்தில் நடைபெற உள்ள ஆசியன் யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் விஷ்ணுஸ்ரீ பங்கேற்க உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக ஆசியன் யூத் தடகள போட்டியில் பங்கேற்கும் வீரர் விஷ்ணுஸ்ரீ ஆவார். அவருக்கு பயிற்சி அளித்த தலைமை தடகள பயிற்சியாளர் அழகேசன் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story