திருத்தங்கலில் வாலிபர் மர்ம சாவு


திருத்தங்கலில் வாலிபர் மர்ம சாவு
x

திருத்தங்கலில் வாலிபர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கலில் வாலிபர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தினர் அதிர்ச்சி

திருத்தங்கல் பாண்டியன்நகர் முதல் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மாரிமுத்து (வயது 20). இவர் சிவகாசியில் உள்ள ஒரு நிதிநிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்த மாரிமுத்து எப்போதும் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பாட்டி லட்சுமி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த 13-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாரிமுத்துவை பல இடங்களில் தேடினர். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தனர்.

வாலிபர் சாவு

போலீசார் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டு பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாரிமுத்துவின் தாத்தா சின்னபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story