திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் முப்பெரும் விழா


திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் முப்பெரும் விழா
x

திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.

தஞ்சாவூர்

திருவையாறு:

திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் தமிழிசை விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அரசர் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அரசு இசைக்கல்லூரி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.விழாவில் திருவையாறு பேரூராட்சித்தலைவர் கஸ்தூரிநாகராஜன், உதவி கருவூல அலுவலர் பரிமளா, மின்சாரவாரிய உதவிபொறியாளர் சண்முகபிரியா ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் சிறப்பு நாதஸ்வரம், தவில் இசை நடைபெற்றது. பின்னர் கிராமிய கலை நிகழ்ச்சி, பொய்க்கால் குதிரை நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) குரலிசை நிகழ்ச்சியும், பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை(புதன்கிழமை) கல்லூரி ஆண்டுவிழா நடைபெறுகிறது. விழாவிற்கு மண்டல கலைப்பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் தலைமை தாங்குகிறார். மாணவி ஸ்ரீவித்யா ஆண்டறிக்கை வாசிக்கிறார். விழாவில் தவில் வித்வான்கள் தஞ்சை டி.ஆர்.கோவிந்தராஜன், ஏ.ஆர்.தாஸ் ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். முன்னதாக கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முடிவில் பேராசிரியர் கோவிந்தராஜன் நன்றி கூறுகிறார்.

--


Next Story