திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம்
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம்
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம் நடந்தது. தேரை திரளான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
ஆடிப்பூர விழா
திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் கலைநிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஆடிப்பூர விழா தேரோட்டம் நடைபெற்றது. தேரில் அம்மபாள் அமர்ந்து நான்கு வீதிகளிலும் உலா வந்தது. தேரை திரளான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையடி வந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) கொடி இறக்கம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27-வது சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.