திருவானைக்காவல். வாழவந்தான் கோட்டை பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


திருவானைக்காவல். வாழவந்தான் கோட்டை பகுதிகளில் நாளை  மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

திருவானைக்காவல். வாழவந்தான் கோட்டை பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தீருச்சி ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருவானைக்காவல் சன்னதிவீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கார்நகர், பஞ்சக்கரைரோடு, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டீ.நகர், ராகேவந்திரா கார்டன், காந்திரோடு, டிரங்க்ரோடு, சிவராம்நகர், எம்.கே.பேட்டை, சென்னை- பைபாஸ்ரோடு, கல்லணைரோடு, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வரர்நகர், அகிலாண்டேஸ்வரிநகர், வெங்கடேஸ்வராநகர், தாகூர்தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதேபோல் திருச்சி வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறப்படும் ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், கீழகுமரேசபுரம், தமிழ்நகர், பெல் டவுன்ஷிப்பில் சி மற்றும் டி- செக்டார்களில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல்நகர், வ.உ.சி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.


Next Story