திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்


திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனா்.

கடலூர்

நெல்லிக்குப்பம்:

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவந்திபுரத்திற்கு வந்தனர். நேற்று அதிகாலை 2 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்று, சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் திருவந்திபுரம் சாலக்கரை இலுப்பை தோப்பில் அமைத்துள்ள மொட்டை அடிக்கும் கூடாரத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story