திருவாரூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 36 ஆயிரத்து 384 வாக்காளர்கள்
திருவாரூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 10 லட்சத்து 36 ஆயிரத்து 384 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 10 லட்சத்து 36 ஆயிரத்து 384 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.
இறுதி பட்டியல் வெளியீடு
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் செல்வராஜ் எம்.பி. உடனிருந்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 69 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 71 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 169 வாக்காளர்கள் உள்ளனர்.
நன்னிலம்-மன்னார்குடி
நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 217 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 36 ஆயிரத்து 186 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து70 ஆயிரத்து 423 வாக்காளர்கள் உள்ளனர்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 26 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 30 ஆயிரம் பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 35 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 405 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 345 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலினத்தவர்களும் மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 757 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 717 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 29 ஆயிரத்து 602 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 10 லட்சத்து 36 ஆயிரத்து 384 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் நீக்கம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் மூலம் 4 தொகுதிகளில் 17 ஆயிரத்து 796 வாக்காளர்கள் கூடுதலாக சோக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 ஆயிரத்து 541 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியல்கள் உதவி கலெக்டர் அலுவலகங்கள், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி ஆணையர் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியல்களை http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம்.
இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்
மேலும் இன்று (அதாவதுநேற்று) முதல் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் தொடங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 2023 ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும், www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா சிதம்பரம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது)பாலசந்தர், உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தாசில்தார், நகராட்சி ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.