திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணிக்கு 3 மாவட்ட போலீசார் வருகை


திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்  கும்பாபிஷேக பாதுகாப்பு பணிக்கு  3 மாவட்ட போலீசார் வருகை
x

திருவட்டார் கோவில் அருகே அரச மரத்தில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. பச்சை வண்ணத்தில் மின்விளக்குகள் ஜொலிக்கும் காட்சி.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணிக்கு 3 மாவட்ட போலீசார் வருகிறார்கள்.

மாவட்ட செய்திகள்

திருவட்டார்,

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணிக்கு 3 மாவட்ட போலீசார் வருகிறார்கள்.

கும்பாபிஷேகம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவிலின் வெளிப்புறம் வெள்ளை மற்றும் காவிப்பூச்சு பணிகள் முடிந்து விட்டது. கோவில் கிழக்கு வாசல் சுவரில், மகா விஷ்ணு, கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமர்பட்டாபிஷேக காட்சி ஆகிய ஓவியங்களை தக்கலையை சேர்ந்த ஓவியர்கள் சேது, வினு ஆகியோர் தத்ரூபமாக தீட்டி வருகிறார்கள்.

மேலும் கோவிலின் கருவறை மண்டபம், உதய மார்த்தாண்ட மண்டபத்தின் மேற்கூரைகள் அஷ்டபந்தன காவி பூசப்பட்டுள்ளது. தற்போது கோவில் கருவறையைச்சுற்றி வரையப்பட்டுள்ள மியூரல் ஓவியங்கள் குறித்து தொல்லியல் துறை சிறப்பு அலுவலர் லோகநாதன் ஆய்வு செய்தார்.

மின்விளக்கு அலங்காரம்

உதய மார்த்தாண்ட மண்டபத்தில் உள்ள பழமை வாய்ந்த சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் உள்ள புடைப்புச்சிற்பங்கள் பளபளப்புடன் காட்சி தரும் வகையில் வார்னீஷ் பூசப்பட்டு உள்ளது. திருவட்டார் கோவில் அருகில் உள்ள அரசமரம் மற்றும் காங்கரை, பஸ் நிறுத்தம், சந்தை ஆகிய இடங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

கும்பாபிஷேக விழாவில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் எனவும், ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதைத்தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குமரி மாவட்ட போலீசார் மட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகிறார்கள்.

வருகிற 29-ந்் தேதி முதல் திருவட்டார் நகர் முழுவதும் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் என அதிகாரிகள் கூறினர்.


Next Story