திருவேங்கடம் கலைவாணி பள்ளி அணி, மாநில போட்டிக்கு தகுதி
மாவட்ட கைப்பந்து போட்டியில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி அணி, மாநில போட்டிக்கு தகுதி
தென்காசி
திருவேங்கடம்:
தென்காசி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளார்கள்.
ஆண்கள் மூத்தோர் பிரிவில் முதலிடமும், பெண்கள், இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆகிய மூன்று அணிகளும் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற நான்கு அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான வி.பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story