உஸ்பெகிஸ்தான் நாட்டில் திருவெறும்பூர் தொழிலாளி சாவு
உஸ்பெகிஸ்தான் நாட்டில் திருவெறும்பூர் தொழிலாளி இறந்தார்.
திருச்சி
திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் திருப்பதி (வயது 40). இவர் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கம்பி கட்டும் கூலி வேலைக்காக சென்றார். இந்தநிலையில் பணியின்போது இறந்ததாக சின்னசூரியூரில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் திருப்பதி உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும், இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முக சுந்தரம் மூலம் மனு கொடுத்துள்ளார். இறந்த திருப்பதிக்கு யோகேஷ் (14) என்ற மகனும், மோகனா என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story