இருளில் மூழ்கும் திருவிடைமருதூர் போலீஸ் நிலையம்


இருளில் மூழ்கும் திருவிடைமருதூர் போலீஸ் நிலையம்
x

மின்தடை ஏற்பட்டால் திருவிடைமருதூர் போலீஸ் நிலையம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இங்கு புகார் மனு எழுத பொதுமக்கள், ‘டார்ச் லைட்’ கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

மின்தடை ஏற்பட்டால் திருவிடைமருதூர் போலீஸ் நிலையம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இங்கு புகார் மனு எழுத பொதுமக்கள், 'டார்ச் லைட்' கொண்டு வருகின்றனர்.

இருளில் மூழ்கும் போலீஸ் நிலையம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவிடைமருதூர் தாலுகா. இந்த தாலுகா தலைமை போலீஸ் நிலையமாக திருவிடைமருதூர் போலீஸ் நிலையமாக திகழ்கிறது. இதனால் இந்த போலீஸ் நிலையத்துக்கு தினமும் புகார் கொடுக்க பலர் வந்து செல்கின்றனர்.

மின்தடை ஏற்பட்டால் இந்த போலீஸ் நிலையம் இருளில் மூழ்கி கிடக்கிறது. நவீன காலத்திற்கு ஏற்ப யு.பி.எஸ். வசதி இல்லாததால் போலீஸ் நிலையத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணியாற்றி வருகின்றனர்.

'டார்ச் லைட்' கொண்டு வரும் பொதுமக்கள்

இதனால் இங்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் 'டார்ச் லைட்' கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் புகார் மனு எழுதுவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனை உடனடியாக சரி செய்து நவீன காலத்திற்கு ஏற்ப மின்தடை ஏற்படும் நேரங்களில் யு.பி.எஸ். கருவி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த போலீஸ் நிலையம் அருகே தாசில்தார் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், கிளைச்சிறை, துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்குவதால் பொதுமக்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

உயர்கோபுர மின் விளக்கு

முக்கியமான சாலையான கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் மின்மினி பூச்சிகள் போல் வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் ஒளிர்கின்றன. இதனால் அந்த பகுதி எப்போதும் இருளாகவே தென்படுகிறது.

இதன் காரணமாக பஸ் ஏறி செல்வதற்கு காத்திருக்கும் பயணிகள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர். எனவே அந்த இடத்தில் அதிக ஒளி தரக்கூடிய உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story