அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா


அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா
x

அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே பொட்டகுளத்து அய்யனார் கோவிலில் வைகாசி பொங்கல் விழா நடைபெற்றது. கமுதி அருகே பெரிய உடப்பங்குளம் கிராமத்தின் கண்மாய் அருகே உள்ள பொட்டகுளத்து அய்யனார், சமேத பூரண புஷ்கலா, விநாயகர், கருப்பணசாமி மற்றும் 21 தேவதைகள் ஆகிய தெய்வங்களுக்கு வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. கிராமத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கோவிலின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் கருப்பண சாமி முன்பு கிடாய் வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று மாலை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் பெரிய உடப்பங்குளம் கிராமத்தில் இருந்து முளைப்பாரி புறப்படும் முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கும்மி யடித்து, முளைப்பாரியை தலையில் சுமந்து சென்றனர். சிறுமியர்கள் கோலாட்டமாடி, முளைப்பாரி ஊர்வலத்தை அழைத்துச் சென்று பொட்டகுளம் கண்மாயில் கரைத்தனர். ஏற்பாடுகளை பெரியஉடப்பங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story