மழைமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


மழைமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாழ்மங்கலம் மழைமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுமங்கலி பெண்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story