குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story