பிரசன்ன சின்ன மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறை பிரசன்ன சின்ன மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் உள்ள பிரசன்ன சின்ன மாரியம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி கோவிலின் முன்பு அம்பாளின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு, அலங்கரித்து வைக்கப்பட்ட திருவிளக்குக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள், குங்குமம், பூக்களை கொண்டு திருவிளக்குக்கு பூஜைகளை செய்து வழிபாடு நடத்தினர். பூஜைகளை சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் செய்து வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருமண வரம், மாங்கல்ய பலம், குழந்தை பேறு வேண்டி வழிபாடு நடத்தினர்.
Related Tags :
Next Story