பாலசாஸ்தா அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
திருப்பூர்
கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றக்கூடியதுமான சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்புடைய ஆன்மிகத் திருத்தலங்கள் உள்ள சேவூரில், பாலசாஸ்தா அய்யப்பன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், சாஸ்தா ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு அஷ்டாபிஷேகம், மகா அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு ஜண்டை மேளதாளத்துடன் அய்யப்பசாமி முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அய்யப்ப பக்தர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story