திசையன்விளை பேரூராட்சி கூட்டம்


திசையன்விளை பேரூராட்சி கூட்டம்
x

திசையன்விளை பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் ஜான்சிராணி தலைமையில் நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் ஜான்சிராணி தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ஜெயக்குமார், செயல் அலுவலர் சாஜன் மேத்யூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தாயார் ஹீராபென் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தடையின்றி கிடைக்க உடைப்புகளை சரிசெய்ய தேவையான உதிரிபாகங்களை முன்னதாகவே வாங்குவது, குடிநீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பதை தடுக்க மின்மோட்டாரை பறிமுதல் செய்வது, சாலைகள், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story